MEDIA STATEMENT

வலுவான ரிங்கிட் உலகளாவிய பார்வையை மாற்றுவதில் மடாணி அரசாங்கத்தின் வெற்றியை பிரதிபலிக்கிறது

20 செப்டெம்பர் 2024, 11:33 AM
வலுவான ரிங்கிட் உலகளாவிய பார்வையை மாற்றுவதில் மடாணி அரசாங்கத்தின் வெற்றியை பிரதிபலிக்கிறது

புத்ராஜெயா, செப்டம்பர் 20 - மலேசியாவின் பொருளாதார அடிப்படைகள் குறித்து உலகளாவிய பார்வையை மடாணி அரசாங்கம் வெற்றிகரமாக மாற்றியிருப்பதை  வலுவான  ரிங்கிட்  நிரூபிக்கிறது என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

இன்று காலை 10.20 மணி நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட் RM4.19 என்ற உச்சத்தை எட்டியுள்ளது, இது ஆண்டு இறுதியில் RM4.50 எட்டும் என்ற முந்தைய கணிப்பை பொய்யாக்க கூடியதும்  ஆகும்.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று முக்கிய கட்டமைப்புகள் - மடாணி  பொருளாதாரம், புதிய தொழில்துறை மாஸ்டர் பிளான் 2030 (NIMP 2030), மற்றும் தேசிய ஆற்றல் மாற்றம் பாதை வரைபடம் (NETR) - குறுகிய காலத்திற்குள் நாட்டில் விரைவான மாற்றங்களுக்கு வழிவகுத்தது.

"இரண்டு ஆண்டுகளில், மடாணி அரசாங்கம்  மலேசியாவை சரியான பாதையில் வெற்றிகரமாக கொண்டு சென்றுள்ளது, மற்றவற்றுடன், அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் ரிங்கிட் 4.19 ஆக உயர்ந்ததை நாங்கள் காண்கிறோம்," என்று அவர் இன்று தகவல் தொடர்பு அமைச்சகத்தின் மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார். .

யூனிட்டி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராக இருக்கும் ஃபஹ்மி, வர்த்தகம் மற்றும் முதலீடுகள் அதிகரிப்பு உட்பட மற்ற சாதனைகளை எடுத்துரைத்தார்.

ஜூலை மாதம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின்  மடாணி அரசு பொறுப்பேற்ற பிறகு புதிய கடன் அளவு குறைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதே நேரத்தில், பற்றாக்குறை குறைப்பு, நிலையான பணவீக்கம், அதிகரித்து வரும் வேலை வாய்ப்புகள் மற்றும் அதன் விளைவாக குறைந்த வேலைவாய்ப்பின்மை விகிதம்  போன்றவைகள் மலேசியா சரியான பாதையில் உள்ளது என்பதற்கு சான்றாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

உலகளவில்  (செமிகொண்டக்டர்) குறைக்கடத்தி உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான முக்கிய பிராந்திய மையங்களில் ஒன்றாக மலேசியா மாறி வருவதும் ஒன்று என அன்வார் கூறினார்.

எவ்வாறாயினும், மத்திய கிழக்கில் குறிப்பாக லெபனான் மற்றும் பாலஸ்தீனத்தில் இன்னும் போர் நிறுத்தம் மற்றும் சமாதானம் இன்னும் அடையப்படாத பதட்டமான சூழ்நிலை போன்ற தொடர்ச்சியான சவால்களைக் கருத்தில் கொண்டு, இந்த வெற்றிகளால் திருப்தி அடைய வேண்டாம் என்று மலேசியர்களுக்கு ஃபஹ்மி நினைவூட்டினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.