(ஆர்.ராஜா)
ஷா ஆலம், செப். 17- இவ்வாண்டு தீபாவளி திருநாளை முன்னிட்டு
கோத்தா டாமன்சாரா தொகுதி 400 ஷோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டுகளை
தொகுதியில் உள்ள வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஒதுக்கியுள்ளது.
இம்மாதம் 11ஆம் தேதி தொடங்கி நாளை 18ஆம் தேதி வரை இந்த பற்றுச்
சீட்டுகளுக்கு பொது மக்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் இஸ்வான் காசிம் தனது பேஸ்புக் பக்கத்தில்
குறிப்பிட்டுள்ளார்.
வசதி குறைந்த பி40 தரப்பினரை இலக்காகக் கொண்ட இந்த பெருநாள்
கால ஷோம் ஷோப்பிங் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு
தலா 200 வெள்ளி மதிப்புள்ள பற்றுச் சீட்டுகள் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
.
மாநில அரசின் உதவித் திட்டங்களான எஸ்.எம்.யு.இ., எஸ்.எம்.ஐ.எஸ்.
மற்றும் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வுத் திட்டத்தில் பங்கு
பெறாத தொகுதி மக்கள் இந்த பற்றுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று
அவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோர் மாதம் 3,000 வெள்ளிக்கும்
குறைவாக குடும்ப வருமானம் பெறுபவர்களாகவும் கோத்தா டாமன்சாரா
தொகுதி வாக்காளர்களாகவும் இருப்பது அவசியம் என அவர் கூறினார்.
இந்த பற்றுச் சீட்டுக்கு விண்ணப்பம் செய்வோர் கணவர் மற்றும்
மனைவியின் அடையாளக் கார்டு, சம்பள விபர அறிக்கை ஆகியவற்றை
உடன் கொண்டு வர வேண்டும்.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும்
தீபாவளியை முன்னிட்டு 44 லட்சம் வெள்ளி செலவில் 22,000 இலவச
பற்றுச் சீட்டுகளை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. மாநிலத்திலுள்ள 56
தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படும் வசதி குறைந்தவர்களுக்கு இந்த பற்றுச்
சீட்டுகள் வழங்கப்படும்.








