MEDIA STATEMENT

91வது மலேசிய ஆயுதப்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

17 செப்டெம்பர் 2024, 9:29 AM
91வது மலேசிய ஆயுதப்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

கோலாலம்பூர், செப்.17-  நாட்டின் 91வது மலேசிய ஆயுதப்படை   தினத்தை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் தனது வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொண்டார்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் தேசிய வீரர்கள் ஆற்றும் சேவைகள் மற்றும் தியாகங்களைத் தாம்   பாராட்டுவதாக அவர்  தனதுமுகநூல் பதிவில் கூறினார்.

மலேசிய ஆயுதப்படை குடும்பத்தினர் அனைவருக்கும் எனது பாராட்டுகள். நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் நீங்கள் ஆற்றிவரும் சேவைகள் மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி.

இந்த அன்பான நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்யுங்கள். 91வது அயுதப்படை தின வாழ்த்துக்கள் என்று அன்வார் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.