MEDIA STATEMENT

மரம் வீட்டின் மீது விழுந்து ஆடவர் காயம்- சுங்கை பட்டாணியில் சம்பவம்

17 செப்டெம்பர் 2024, 9:20 AM
மரம் வீட்டின் மீது விழுந்து ஆடவர் காயம்- சுங்கை பட்டாணியில் சம்பவம்

சுங்கை பட்டாணி, செப். 17- இலவம் பஞ்சு மரம் வீட்டின் மீது விழுந்த  சம்பவத்தில் 34 வயது ஆடவர் ஒருவர் தலையில் பலத்தக் காயங்களுக்ளுள்ளானார். இச்சம்பவம் இங்குள்ள புக்கிட் செலம்பாவ், கம்போங் நியோரில் இன்று அதிகாலை நிகழ்ந்தது.

 பலகை மற்றும் செங்கல் கொண்டு கட்டப்பட்ட வீட்டின் மீது மரம் விழுந்தது தொடர்பில் இன்று அதிகாலை 1.18 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக அமான் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் அஸ்ஹாரி அப்துல்லா கூறினார்.

தீயணைப்பு வீரர்கள் விடியற்காலை 1.44 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்ததாகக்  கூறிய அவர், மரம் ஒன்று வீட்டின் மீது விழுந்து  34 வயது ஆடவர் ஒருவர் தலையில் பலத்தக் காயங்களுக்குள்ளானதைக் கண்டதாக சொன்னார்.

விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் வீட்டின் இடிபாடுகளில் சிக்கியிருந்த அந்த ஆடவரை மீட்டனர். சம்பவ இடத்தில் இருந்த மலேசியா சுகாதார அமைச்சின் உறுப்பினர்கள் அவருக்கு முதலுதவி வழங்கி தொடர் சிகிச்சைக்காக சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் சேர்த்தனர் என்றா அவர்.

வீட்டின் மீது விழுந்த அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகள் விடியற்காலை 2.10 மணிக்கு முற்றுப் பெற்றதாக அவர் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.