MEDIA STATEMENT

சிலாங்கூர்  சிறுவர்  நட்சத்திரங்கள் 2024 பாடும் திறன் போட்டி- உடனே பதிந்து கொள்ளுங்கள்

14 செப்டெம்பர் 2024, 1:30 AM
சிலாங்கூர்  சிறுவர்  நட்சத்திரங்கள் 2024 பாடும் திறன் போட்டி- உடனே பதிந்து கொள்ளுங்கள்

கிள்ளான் , 14 செப் ;  சுமார் 15 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசு வழங்கப் படவுள்ள  சிலாங்கூர் சிறுவர் நட்சத்திரங்கள் 2024 ம் ஆண்டு பாடும்  திறன் போட்டி பதிவுக்கான  இறுதி நாள்  செப்டம்பர் 29  என்று   செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கூறினார்

ஆர்வமுள்ள சிறுவர்களை இறுதி நாளுக்கு முன்  பதிவு செய்து கொள்ள  அழைத்த அவர்  தமிழ் கலைஞர்கள் மன்றம், கிள்ளான் விண்வெளி கலை மன்றம், சிலாங்கூர் பாரம்பரிய இசை வாத்திய சங்கம் ஆகியவற்றின் கூட்டமைப்பில் இந்த நிகழ்வு நடைபெறுவதாக  கூறினார்

இப்போட்டியின் தொடக்க சுற்றுகள் அக்டோபர் 5, 6 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாகவும்  அரையிறுதி சுற்று அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன்  பிரமாண்ட இறுதி சுற்று வரும் அக்டோபர் 27 ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாகவும் அவர்    கூறினார்

இசை, பாடல் துறைகளிலும்  இந்திய சிறார்களை ஊக்குவிக்க வேண்டும், அவர்களை சாதனையாளர்களாக  ஆக்க  வேண்டும்  என்ற வேட்கையில்  செந்தோசா சட்டமன்ற சேவை  மையம் , பல இசை கலைஞர்கள் மற்றும்  இசை மன்றங்களின்  உதவியுடன்   இப் போட்டி நடத்தப்பட்டு வருவதாகவும்  அதில்  வெற்றி பெற்று பல கவர்ச்சிகரமான பரிசுகளை  வெல்ல ஆர்வம் உள்ள சிறுவர்களை அழைக்கிறது.

ஆகவே ஆர்வமுள்ள சிறார்கள் விரைந்து கூகல் வழி பதிந்துக் கொள்ளலாம் https://bit.ly/sjss_2024 விண்ணப்ப பாரங்களை பெறவும்   மேல் விவரங்களுக்கு திருவாளர் மேரி  012 282 3002 , மற்றும்  திருவாளர்  உஷா   016 205 8717  என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்

இன்றைய சந்திப்பில், பதிவுக்கான இறுதி நாள் செப்டம்பர் 29 ஆம் தேதியாகும் என்பதை மீண்டும் நினைவுபடுத்தினார் என்று குணராஜ் கூறினார்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.