மோரிப். செப்டம்பர் 9. மேற்கு மலேசியாவின் மோரிப் கடற்பரப்பில் பலம் பொருந்திய இந்திய படையின் 46 வது கடற்பட்டாளம் 1945ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ந்தேதி 42,561 படை வீரர்களுடன் வந்து இறங்கிய 79 ஆண்டு வது நினைவு நாள் கொண்டாட்டத்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு வீ.பாப்பாராய்டுவும் கலந்துக்கொண்டார்.

இந்த கொண்டாட்டத்தை (PKVIATM) என்ற மலேசிய ஆயுதப்படையின் இந்திய படைவீரர் நல சங்கம், ஏற்பாடு செய்திருந்தது. செப்டம்பர் 9, 1945 அன்று ஜப்பானிய தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க மோரிப் கடற்கரையில் பிரிட்டிஷ் இந்திய இராணுவம் தரையிறங்கியதை நினைவுகூரும் நாளாக இந்த வருடாந்திர நிகழ்ச்சி நடக்கிறது.
இந்திய தூதரகத்தில் இருந்து கர்னல் பிரவீன், PKVIATM மின் காப்பாளர் மேஜர் ஜெனரல் டத்தோ பத்மன் அவர்களும், தலைவர் ஜெயசேகரன் மற்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும் திரளாக இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மோரிப் கடற்கரையில் அமைந்திருக்கும் நினைவு சின்னத்தில் வருகை புரிந்தவர்கள் மலர் மாலைகள் சாற்றி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வு ஜப்பானிய காலனித்துவத்தில் இருந்து மலாயாவை விடுவிப்பதற்கான தொடக்கத்தைக் குறிப்பிடுவதுடன், இறுதியில் மக்களுக்கு பாதுகாப்பு அளித்து நமது
பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுக்க உதவியதாக மாண்புமிகு பாப்பா ராய்டு கூறினார்.அவர்களின் வீரம் மோரிப் மணலில் பதிந்திருக்கிறது. சுதந்திரத்திற்காகவும் நீதிக்காகவும் போராடிய இந்தத் துணிச்சலான மாவீரர்களை நாம் ஒன்றாகக் கௌரவிப்போம் என கேட்டுக்கொண்டார்.







