இந்திய சமூகத் தலைவர்களுக்கான மானியத்தை அதிகரிக்க அரசிடம் பரிந்துரை- பாப்பா ராய்டு தகவல்

7 செப்டெம்பர் 2024, 8:45 AM
இந்திய சமூகத் தலைவர்களுக்கான மானியத்தை அதிகரிக்க அரசிடம் பரிந்துரை- பாப்பா ராய்டு தகவல்

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், செப். 7-  இந்திய சமூகத் தலைவர்களுக்கான வருடாந்திர  மானியத்தை அடுத்தாண்டு தொடங்கி 10,000 வெள்ளியிலிருந்து 20,000 வெள்ளியாக உயர்த்துவதற்கான பரிந்துரையை தாம் மாநில அரசிடம் முன்வைத்துள்ளதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு கூறினார்.

தமது இந்த பரிந்துரையை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ள வேளையில் மானிய உயர்வு தொடர்பான திட்ட அறிக்கை முறையாக ஆட்சிக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு உரிய அங்கீகாரத்துடன் அது நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

சட்டமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் தங்கள் தொகுதிகளில் இந்திய சமூகத் தலைவர்கள் தங்கள் பணிகளை ஆக்ககரமான மேற் கொள்வதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மானிய உயர்வு பரிந்துரை முன்வைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அதே சமயம், தங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்திய சமூகத் தலைவர்களும் தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டா. அவர்கள் மலாய் மொழியில் திறன் பெற்றவர்களாகவும் தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுடன் அணுக்கமான உறவை கொண்டிருப்பவர்களாகவும் இருத்தல் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, ஒவ்வொரு இந்திய சமூகத் தலைவரும் மாதத்திற்கு குறைந்த அளவு திட்டங்களையாவது மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தங்களின் செயல்திறனை அவர்கள் நிரூபிப்பதற்கு அரிய வாய்ப்பு கிட்டும் என்று அவர் சொன்னார்.

இந்திய சமூகத் தலைவர்களாக பதவி வகிப்பவர்கள் பிற்காலத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்களாவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் உயர்வு காண்பதற்குரிய வாய்ப்பு உள்ளது. ஆகவே, முன்னேற்றத்திற்கான படிக்கட்டாக விளங்கும் இந்த பதவியை பயன்படுத்தி அவர்கள் ஆக்ககரமான முறையில் செயலாற்றுவது அவசியம் என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.