MEDIA STATEMENT

சிலாங்கூர் ஸ்மார்ட் வாடகை திட்டத்திற்கு 6,000 வீடுகளை இலக்கு வைத்துள்ளது

7 செப்டெம்பர் 2024, 5:32 AM
சிலாங்கூர் ஸ்மார்ட் வாடகை திட்டத்திற்கு 6,000 வீடுகளை இலக்கு வைத்துள்ளது

ஷா ஆலம், 6 செப்.: மாநில நிர்வாகம் 2026 ஆம் ஆண்டுக்குள் 6,000 மலிவு விலை வீடுகளை ஸ்மார்ட் வாடகை திட்டத்தின் கீழ் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஹவுசிங் எக்ஸ்கோ டத்தோ போர்ஹான் அமான் ஷா கூறுகையில், ஏறக்குறைய 2,000 வீடுகள் இத்திட்டத்தின் கீழ் வைக்கப் பட்டுள்ள இத்திட்டம்,  நியாயமான வாடகை விகிதங்கள் காரணமாக நல்ல வரவேற்பைப் பெற்றன.

"இந்த திட்டம்  குடியிருப்பாளர்கள்  சொந்த வீட்டை  பெற   உதவுகிறது, ஏனெனில் வாடகை விகிதத்தில் 30 சதவிகிதம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு டிரீம் ஹோம் அல்லது ஹோப் ஹோம் வாங்குவதற்கு வைப்புத்தொகையாகப் பயன்படுத்தப்படும்," என்று அவர் கூறினார்.

இத்திட்டம் மற்ற பகுதிகளுக்கு விரிவு படுத்தப்  படுவதற்கு முன்பு இதுவரை கோம்பாக், உலு லங்காட், பெட்டாலிங் ஜெயா மற்றும் சுபாங் உள்ளிட்ட வளர்ச்சிப் பகுதிகள் அல்லது நகரங்களில் கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார்.

ஸ்மார்ட் வாடகைத் திட்டம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குழுக்களுக்கு அதிகபட்சமாக ஐந்து வருட வாடகை காலத்துடன் தங்கள் சொந்த வீட்டை  பெறுவதற்கான  வாய்ப்பை வழங்குகிறது.

2025 ஆம் ஆண்டளவில், சிலாங்கூர் அரசாங்கம் சிலாங்கூர்கூ  ரூமா 3.0 வீட்டுக் கொள்கையின் மூலம் 60,000 குடியிருப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.