MEDIA STATEMENT

நிலுவையில்  உள்ள தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) பில்களுக்கு  தள்ளுபடியா? சிண்டிகேட் போலீஸ் கண்காணிப்பில்.

7 செப்டெம்பர் 2024, 5:29 AM
நிலுவையில்  உள்ள தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) பில்களுக்கு  தள்ளுபடியா? சிண்டிகேட் போலீஸ் கண்காணிப்பில்.

கோலாலம்பூர், 6 செப்டம்பர்: நிலுவையில் உள்ள தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) பில்களுக்கு  தள்ளுபடிகள் வழங்குவதாக  விளப்பர படுத்திக் கொள்ளும்  ஒரு சிண்டிகேட் இதுவரை கிட்டத்தட்ட RM 280,000 சுருட்டியது

புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJK) இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப், ஃபேஸ்புக் சமூக ஊடகங்கள் மூலம் சுமார் 20 முதல் 30 சதவிகிதம் வரை தள்ளுபடியுடன் இந்தச் சேவையை சிண்டிகேட் வழங்குவதைக் கண்டறிந்துள்ளனர். காவல்துறை  அந்த  சிண்டிகேட்டை கண்காணித்து வருவதாக கூறினார்.

ஆர்வமுள்ளவர்கள், நிலுவையில் உள்ள பில்லின் புகைப்படத்தை அனுப்ப  அறிவுறுத்தப் படுவதற்கு முன், காட்டப் பட்ட எண்ணுடன் தொடர்புக் கொண்டு  "சிண்டிகேட் பின்னர் பில் செட்டில் செய்யப் பட்டதாகக் கூறும் கட்டண ரசீதுடன் புகைப்படத்தை அனுப்பும், மேலும் கொடுக்கப்பட்ட தனி நபரின் வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றுமாறு பாதிக்கப் பட்டவரை அறிவுறுத்தும்.

"பணப் பரிமாற்றத்தைச் செய்த பிறகு, பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் (TNB) பில் இன்னும் நிலுவையில் இருப்பது கண்டு, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்வர்," என்று அவர் இன்று JSJK அலுவலகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இதே முறையை பயன்படுத்தி இதுவரை ஏழு வழக்குகளில் மொத்தம் RM 279,289 இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மோசடிக்கான தண்டனை சட்டம் பிரிவு 420 இன் கீழ்  இந்த  புகார் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஒரு வழக்கில், மோசடி செய்பவர் ஏமாற்றப் பட்ட அல்லது வேறொருவர் கணக்கிற்கு மாற்றப்படும் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான சேவைகளை 'ஏஜெண்ட்'களாகக் காட்டிக் கொள்ளும் தரப்பினரை உள்ளடக்கிய ஒரு மோசடி தந்திரத்தை போலீசார் கண்டறிந்தனர்.

ராம்லி கூறுகையில், இந்தச் சேவை உண்மையில் இல்லை, ஏனெனில் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க விசாரணை அதிகாரிகளால் மட்டுமே பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறை செய்ய முடியும்.

"ஒரு முகவர் மூலமாகவோ, ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு மூலமாகவோ அல்லது அது போன்றவற்றின் மூலமாக  இந்த விஷயத்திற்கு தீர்வு காண குறுக்கு வழி எதுவும் இல்லை என்பதை பொதுமக்கள்  என அவர்  தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.