MEDIA STATEMENT

உரிமைக் கட்சியின் இரண்டு மாநில  தலைவர்கள் கைது

6 செப்டெம்பர் 2024, 6:36 PM
உரிமைக் கட்சியின் இரண்டு மாநில  தலைவர்கள்  கைது

பெட்டாலிங் ஜெயா: சிலாங்கூர்  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, உரிமைக் கட்சியின் இரண்டு மாநில  தலைவர்களுக்கு எதிராக காவல் துறையிடம்  புகார் அளிக்க  தனது  தரப்புக்கு உத்தரவிட்டதை ஆதரித்தார்.

மே மாதம் நடந்த கோலா குபு பாரு இடைத் தேர்தலுக்கு மாநிலத்தின் சிலாங்கூர்  இந்தியர் வளர்ச்சி  மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் (ஐசீட்) நிதியை  தவறாக பயன்படுத்தியதாக   டிக் டோக் வீடியோ மூலம்  இந்த இருவரும்  குற்றம் சாட்டியதாக  மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புக் குழு தலைவரான வீ.பாப்பாராய்டு கூறினார்.

இந்த  குற்றச்சாட்டை மறுத்த அவர், ஐ சீட் நிதி இன்னும் இந்திய சமூகத்தின்  பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது  என்று கூறினார்.

"தவறான  தகவலை மக்களிடம்  டிக் டோக் வீடியோ மூலம்  கசிய விட்டது, முற்றிலும் தவறானது"  என  டிஏபி தலைவர்களில் ஒருவரான  அவர்  கூறினார்.

அந்த தவறான  அறிக்கை  வெளியிட்டவர்கள் மீது போலீஸ் புகார் தாக்கல் செய்யும்படி, அத் திட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரை தாம் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.

இது என் மீதும், மாநில அரசு மீதும், ஐசீட் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை  சுமத்துகிறார்கள்  என்பதற்கு  தன்னிடம் போதிய ஆதாரம் இருப்பதாகவும்,  பொதுமக்களிடம்  தவறான தகவல்களை வழங்கியவர்கள், தங்கள்  சுமத்திய குற்றச்சாட்டை நிரூபிக்க  இது  அவர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு   என்றார்.

ஐ சீட் மற்றும் இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் (சித்தம்) சம்பந்தப்பட்ட டிக் டோக் வீடியோ  தொடர்பாக சிலாங்கூர் உரிமை தலைவர் கே குணசேகரன் மற்றும் அவரது துணைத் தலைவர் கே சுந்தர்ராஜு ஆகியோர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை  ஒரு நாள் காவலில் வைக்க  காவல்துறைக்கு  உத்தரவு வழங்கப்பட்டதாகவும், இந்த ஜோடி இன்று விடுவிக்க படுவதாகவும் வழக்கறிஞர் எல் மெனஹா கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 509 மற்றும் சிறு குற்றச் சட்டம் 1955 இன் பிரிவு 14 இன் கீழ் அவமதிக்கும் நடத்தைக்காகவும், தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1988 இன் பிரிவு 233 இன் நெட்வொர்க் வசதிகளை தவறாக பயன்படுத்தியதற்காகவும் அவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.