ANTARABANGSA

காஸா மீதான தாக்குதலை விரைந்து நிறுத்த மலேசியா - ரஷ்யா வலியுறுத்து

5 செப்டெம்பர் 2024, 6:08 AM
காஸா மீதான தாக்குதலை விரைந்து நிறுத்த மலேசியா - ரஷ்யா வலியுறுத்து

விளாடிவோஸ்டோக் (ரஷ்யா), செப் 5 - காஸா மீதான கொடூரமான மற்றும் அநீதியான தாக்குதல்களை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மலேசியாவும் ரஷ்யாவும் கூட்டாக வலியுறுத்தின.

ரஷ்யாவுக்கான தனது பயணத்தின் இறுதி நாளான இன்று விளாடிவோஸ்டோக்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார்.

போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் அதே  சமயத்தில் காஸாவில் மனிதாபிமான உதவி, உணவு மற்றும் மருந்துகளை அனுப்ப எகிப்து எடுத்த நடவடிக்கைகளை மலேசியா மதிக்கிறது என்று அவர் சொன்னார்.

இரண்டு நாள் பயணப் மேள்கொண்டு ரஷ்யா சென்றுள்ள அன்வார், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நேற்று விளாடிவோஸ்டாக்கில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.