ANTARABANGSA

ரஷ்ய அதிபருடன் பிரதமர் அன்வார்  சந்திப்பு-  இரு தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்பு

5 செப்டெம்பர் 2024, 2:18 AM
ரஷ்ய அதிபருடன் பிரதமர் அன்வார்  சந்திப்பு-  இரு தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்பு

விளாடிவோஸ்டோக், செப். 5 - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேற்று சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இங்கு நடைபெறும் 9வது கிழக்குப் பொருளாதார ஆய்வரங்கில்  (இ.இ.எஃப்.) கலந்துகொள்வதற்காக அன்வார் மேற்கொண்டுள்ள இரண்டு நாள் பணிநிமித்தப்  பயணத்தின் ஒரு பகுதியாக இந்த  இருதரப்பு சந்திப்பு அமைத்தது.

அன்வார் இன்று இ.இ.எஃப். ஆய்வரங்கின் பிரதான அமர்வில் உரையாற்றுகிறார்.

நேற்று  உள்ளூர் நேரப்படி காலை 8.33 மணிக்கு விளாடிவோஸ்டாக் பிரதமர் வந்தடைந்தார். கடந்த 2022 நவம்பர் மாதம் பிரதமராகப் பதவியேற்ற பிறகு ரஷ்யாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

அவருடன் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ், மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, துணைப் பொருளாதார அமைச்சர் டத்தோ ஹனிபா ஹஜார் தாயிப், துணை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோசப் குருப் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.