MEDIA STATEMENT

முதியவரின் சடலம் தோட்டத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலப் பகுதியில் கண்டுபிடிப்பு

1 செப்டெம்பர் 2024, 10:52 AM
முதியவரின் சடலம் தோட்டத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலப் பகுதியில் கண்டுபிடிப்பு

கோத்தா பாரு, செப். 1- இங்குள்ள கெத்தேரே, கம்போங் பேத்தா நீலாம்

புரியில் உள்ள ஒரு விவசாய தோட்டம் அருகிலுள்ள சதுப்பு நிலப்

பகுதியில் 65 வயது முதியவர் ஒருவர் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

அந்த முதியவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் இன்று காலை

10.00 மணியளவில் பொது மக்களிடமிருந்து தாங்கள் தகவலைப் பெற்றதாக

கெதேரே தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை அதிகாரி

ஹஸ்ரி ஹூசேன் கூறினார்.

இறந்த அந்த முதியவர் கம்போங் பெலுகார் பெத்தா உலுவைச் சேர்ந்த

ஃபக்ருராஸி மாமாட் என அடையாளம் காணப்பட்டதாக அவர் சொன்னார்.

விவசாய தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்கு உருவாக்கப்பட்டதாக

நம்பப்படும் அந்த சதுப்பு நில நீர்தேக்கத்திலிருந்து அந்த முதியவரின்

உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

தனக்குச் சொந்தமான அந்த தோட்டத்திற்கு அதிகாலை 6.30 மணிக்கு

சென்ற அந்த முதியவர் மாலை வரை வீடு திரும்பாததைத் தொடர்ந்து

அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த முதியவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட

கிராமத்து மக்கள் அந்த சதுப்பு நிலப் பகுதியில் அவரது உடலைக்

கண்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.