MEDIA STATEMENT

உலு கிளாங் தொகுதி தலைவர்களுடன் மந்திரி பெசார் சந்திப்பு- வட்டாரப் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்

1 செப்டெம்பர் 2024, 2:17 AM
உலு கிளாங் தொகுதி தலைவர்களுடன் மந்திரி பெசார் சந்திப்பு- வட்டாரப் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்

அம்பாங் ஜெயா, செப். 1- உலு கிளாங் தொகுதித் தலைவர்களுடன் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று சந்திப்பு நடத்தினார்.

உலு கிளாங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சேவை மையத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு ஏயு2 பகுதியில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இந்த சந்திப்பில் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினர் அஜிஸ் ஜாலால், புக்கிட் பாரு  குடியிருப்பாளர் சங்கத் தலைவர் ஹரிஜைன் ஹஷிம் மற்றும் மதராஸா அல்- எஸ்சானியா நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.

மேலும், உலு கிளாங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி, அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத் தலைவர் டாக்டர் அனி அகமது மற்றும் கோம்பாக் மாவட்ட அதிகாரி நோர் அஸ்லினா அப்துல் அஜிஸ் ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.