ANTARABANGSA

பிரான்ஸ் 2024 பாரா ஒலிம்பிக் போட்டி  இன்று தொடங்குகிறது

28 ஆகஸ்ட் 2024, 5:26 AM
பிரான்ஸ் 2024 பாரா ஒலிம்பிக் போட்டி  இன்று தொடங்குகிறது

அங்காரா, ஆக.  28 - பாரிஸ் 2024 பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகரில் இன்று  கோலாகல  விழாவுடன் தொடங்கும் என அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

பாரிஸ் நகரின்  வரலாற்றுச் சிறப்புமிக்க சதுக்கங்களான  ப்ளேஸ் டி லா கான்கார்ட் மற்றும் சாம்ப்ஸ்-எலிசீஸ் அவென்யூ ஆகிய இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள்  ஒரு அறிக்கையில் கூறினர்.

இவ்விரு  இடங்களிலும் 184 பிரதிநிதிகளை உள்ளடக் 4,400 பாராலிம்பிக் விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பு நடத்துவார்கள்.

தொடக்க விழா உள்ளூர் நேரப்படி இரவு 8.00 மணிக்கு தொடங்கும். இந்த தொடக்க நிகழ்வுக்குப் பிறகு போட்டிகள் வரும் வியாழக்கிழமை தொடங்கி நடைபெறும்.

வரும்  செப்டம்பர் 8 வரை  பாரிஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுளது.

2024 பாராலிம்பிக் போட்டியில் பார்வையற்றோருக்கான  கால்பந்து, போக்ஸியா எனப்படும் சக்கர நாற்காலியில் பந்தை உருட்டி விளையாடும் போட்டி,  வில்வித்தை, விளையாட்டு, பூப்பந்து, கயாக்கிங், சக்கர நாற்காலி டென்னிஸ் ஆகியவற்றை  உள்ளடக்கிய 22 விளையாட்டுகள் இடம் பெறும்.

பாரிஸ்  நகரம் முதன்முறையாக கோடைகால பாராலிம்பிக் போட்டியை  நடத்துகிறது. பிரான்சின் தலைநகரான இந்நகரம்  கடந்த  ஜூலை முதல் ஆகஸ்டு வரை கோடைகால ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்தியது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.