ஷா ஆலம், ஆக. 28- நாட்டின் 67வது தேசிய தினம் மற்றும் தேசிய
மாதத்தை முன்னிட்டு தாமான் மற்றும் கிராமங்களை அழகுப்படுத்தும் போட்டியை கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி ஏற்பாடு செய்துள்ளது.
மக்களிடையே நாட்டுப் பற்றை விதைக்கும் நோக்கிலான இந்தப் போட்டி இன்று ஆகஸ்டு 28ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறும். வரும் நவம்பர் 14 முதல் 16 வரை நடுவர்கள் சிறந்த குடியிருப்பு பகுதியை தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுவர்.
இப்போட்டியில் முதல் பரிசாக 500.00 வெள்ளியும் இரண்டாவது பரிசாக 350.00 வெள்ளியும் மூன்றாம் பரிசாக 200.00 வெள்ளியும் வழங்கப்படும்.
இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் https://forms.gle/
என்ற இணைப்பின் வாயிலாக பதிவு செய்யலாம் அல்லது
விளக்கப்படத்தில் உள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸகேன் செய்யலாம். மேல்
விபரங்களுக்கு 03-51314354 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.








