ANTARABANGSA

பிரேசிலில் காட்டுத் தீ! எச்சரிக்கையுடன் இருக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து

27 ஆகஸ்ட் 2024, 2:58 AM
பிரேசிலில் காட்டுத் தீ! எச்சரிக்கையுடன் இருக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து

புத்ராஜெயா,  ஆக.27-  பிரேசிலின் சாவ் பாலோவில்  ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளுக்கு ஏற்ப எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பிரேசிலில் நாட்டின்  பிரேசிலியாவில் உள்ள மலேசியத் தூதரகம்  நிலைமையை அணுக்கமாகக்  கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சு  நேற்று தெரிவித்தது.  இந்த காட்டுத் தீயினால் அந் நாட்டில் கடுமையான பாதிப்பு  ஏற்பட்டுள்ளதோடு பெரும்பாலான பகுதிகளில் அடர்ந்த புகை பரவியுள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

இந்த பேரிடரின் எதிரொலியாக சாவ் பாலோ அதிகாரிகள் 45 மாநகர் மன்றங்களில் அவசரநிலையை அறிவித்துள்ளனர்.

அந்நாட்டு நிலவரங்களை அமைச்சு தொடர்ந்து  உன்னிப்பாகக் கண்காணித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மலேசியர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்த தேவையான சமீபத்திய நிலவரங்களை வழங்கும் என்று  அமைச்சு என்று  கூறியது.

தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள் பிரேசிலியாவில் உள்ள மலேசியத் தூதரகத்தை SHIS QI 05, Chácara 62, Lago Sul, CEP: 71615-904, Brasília – DF, Brasilia, Brazil இல் தொடர்பு கொள்ளலாம் அல்லது + 55 / 61 328 என்ற எண்ணில்  தொடர்பு கொள்ளலாம். + 55 61 3248 6215 அல்லது mwbrasilia@kln.gov.my / br.cons@kln.gov.my இல் மின்னஞ்சல் செய்யலாம் .

இராணுவ விமானத்தின் உதவியுடன் 15,000 க்கும் மேற்பட்ட தொழில்முறை மற்றும் தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருவதாகவும் இத்தீச்சம்பவத்திற்குக் காரணமாக இருந்தது தொடர்பில்  இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.