MEDIA STATEMENT

சீபீல்டு தமிழ்ப்பள்ளியில் தேசிய மாத தொடக்க விழா- சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சிறப்பு  வருகை

25 ஆகஸ்ட் 2024, 10:02 AM
சீபீல்டு தமிழ்ப்பள்ளியில் தேசிய மாத தொடக்க விழா- சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சிறப்பு  வருகை
சீபீல்டு தமிழ்ப்பள்ளியில் தேசிய மாத தொடக்க விழா- சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சிறப்பு  வருகை

(ஆர்.ராஜா)

சுபாங் ஜெயா, ஆக 25-  மாணவர்கள் மத்தியில்  நாட்டுப்பற்றை விதைக்கும் நோக்கிலும் தேசிய தின குதூகலத்தில் அவர்கள் பங்கேற்கும் வகையிலும் தேசிய தின மாத கொண்டாட்ட நிகழ்வுக்கு சுபாங் ஜெயா, சீபீல்டு  தமிழ்ப்பள்ளி சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வுக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் தலைமை தாங்கி,  உரையாற்றிய பிரகாஷ்,  தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதில் மாணவர்கள் காட்டி வரும் உற்சாகமும் அவர்கள் மனதில் பட்டொளி வீசும் நாட்டுப் பற்றுணர்வும்  தம்மை பெரிதும் மனம் நெகிழச் செய்வதாகக் கூறினார்.

இன்று இளம் பிராயத்தினராக விளங்கும் இம்மாணவர்கள்தான்  நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள். தேசிய தினத்தைக் கொண்டாடுவதில் அவர்கள் காட்டும் ஆர்வம் நாட்டுப் பற்று அவர்கள் மனதில் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதைப் புலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்றார் அவர்.

இந்த வண்ணமயமானச் சூழலுக்கு மத்தியில்,  பல, இன கலாசாரப் பின்னணி கொண்ட மலேசியர்களிடையே காணப்படும் ஒற்றுமையுணர்வையும் நம்மால் உணர முடிகிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மாணவர்கள் தங்கள் படைப்புகள் வாயிலாக காட்டிய சமத்துவம்,  நாம் அனைவரின் ஒரே இலக்கை, அதாவது சுபிட்சம் நிறைந்த தேசத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.