ஒரு நாள்  சாம்பியனாக சிலாங்கூர் அணி சுக்மா 12 நாளில் பிரகாசித்தது

23 ஆகஸ்ட் 2024, 6:12 PM
ஒரு நாள்  சாம்பியனாக சிலாங்கூர் அணி சுக்மா 12 நாளில் பிரகாசித்தது
ஒரு நாள்  சாம்பியனாக சிலாங்கூர் அணி சுக்மா 12 நாளில் பிரகாசித்தது
ஒரு நாள்  சாம்பியனாக சிலாங்கூர் அணி சுக்மா 12 நாளில் பிரகாசித்தது
ஒரு நாள்  சாம்பியனாக சிலாங்கூர் அணி சுக்மா 12 நாளில் பிரகாசித்தது

ஷா ஆலம், ஆக. 23 - சரவாக்கில் 21வது மலேசியா விளையாட்டுப் போட்டிகள் (சுக்மா) நாளையுடன் முடிவடையவுள்ளது. இந்த நிலையில், மாநில விளையாட்டு வீரர்கள் நேற்று பதக்கத்திற்கு பின் பதக்கம் வென்று அனைவரையும் பெருமைப் படுத்தியுள்ளனர்.

நேற்று இரவு 11 மணி நிலவரப்படி, சரவாக் 72 தங்கம், 52 வெள்ளி மற்றும் 66 வெண்கலத்துடன் முதலிடத்திலும், அடுத்ததாகக் கூட்டரசு பிரதேசம்  69 தங்கம், 62 வெள்ளி, 68 வெண்கலப் பதக்கங்களுடனும், அதன் பின்னால் மூன்றாவது இடத்தில் சிலாங்கூர் 51 தங்கம், 61 வெள்ளி, 50 வெண்கலம் என 162 பதக்கங்களைப் பெற்று உள்ளது.

1. கூச்சிங்கின் பண்டலேலா ரினோங் சென்டரில்   நடைபெற்ற 4x100 மீ மெட்லே ரிலே போட்டியில் தங்கம் வென்ற நீர் விளையாட்டு ஆண்கள் அணி அன்றைய இறுதி வெற்றியைப் பெற்றது.

2. இந்த 21வது மலேசியா விளையாட்டுப் போட்டியில் சிலாங்கூர் மகளிர் கால்பந்து அணி சபாவுக்கு எதிரான தங்கப் பதக்கப் போட்டியில் கூச்சிங்கில் உள்ள  சரவாக் ஸ்டேடியத்தில் சபாவை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றது.

10 வது நிமிடத்தில் முதல் கோலையும், அதைத் தொடர்ந்து 48 வது நிமிடத்தில் இரண்டாவது கோலையும், 53 வது நிமிடத்தில் மூன்றாவது கோலையும் அடித்துத் தங்கப் பதக்கத்தை வென்றனர்.

3. இன்று பிற்பகல் சிலாங்கூர் குழு பளு தூக்குதல், கைப்பந்து, ஃபுட்சல் மற்றும் கூடைப்பந்து ஆகியவற்றில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றது.

பளு தூக்குதலுக்கான, பெண்களுக்கான 76 கிலோவுக்குட்பட்ட பிரிவில்,  நூர் எலியானா மைசரா நோரஸ்மான் தங்கம் வென்றார்.

4. சிபுவில் உள்ள டேவான் போலா தாம்பார் ரெஜாங்  வாலிபால்  பூங்காவில்,  சிலாங்கூர்  அணி, கூட்டரசு பிரதேச அணியை  வென்றது.

5. இதற்கிடையில், ஃபுட் சலுக்காக, கோத்தா சமரஹானில் உள்ள கோத்தா சமரஹான் உள்விளையாட்டு அரங்கில் சரவாக்கிற்கு எதிரான போட்டியின் போது சிலாங்கூர் தங்கம் வென்றது.

6. சிலாங்கூர் ஆடவர் கைப்பந்து அணி, டேவான் போலாத் தாம்பாரில் நடைபெற்ற கூட்டரசு பிரதேச அணிக்கு  எதிரான போட்டியில் தொடர்ந்து தங்கப் பதக்கத்தை வென்றது.

7.  கூடைப்பந்து போட்டியிலும் சிலாங்கூர் இரண்டு பதக்கங்களை வென்றது. ஒன்று பெண்கள் 3×3 அணி மற்றும் ஆடவர் 3×3 அணி, கூச்சிங்கில் உள்ள ஸ்டேடியம் MBKS இல் ஜோகூருக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வென்றது.

8. இன்று பெத்ரா ஜெயாவில் உள்ள சரவாக் ஸ்டேடியத்தில் நடந்த ஆடவர் மற்றும் பெண்களுக்கான 4x100 மீ ஓட்டத்தில் சிலாங்கூர் ரிலே அணிகள் மாநிலத்திற்கு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று உற்சாகமடைந்தனர்.

சிலாங்கூரின் பெண்கள் நால்வர் அணியும் 47.97 வினாடிகளில்  ஓடி ஆதிக்கம் செலுத்தினர், ஜோகூர் மற்றும் சரவாக்கை 48.32 வினாடிகளில் பின் தள்ளித் தங்கத்தை வென்றனர்.

இன்று மொத்தம் 82 தங்கப் பதக்கங்களுக்கு போட்டி  நடைபெற்றது, இது சுக்மா 2024 தொடரில் ,  ஒரே நாளில் மிக அதிகமான தங்கத்திற்கான  போட்டி நாளாகும் .

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.