MEDIA STATEMENT

துணை வாக்காளர் பட்டியல் பரிசீலனைக்கு திறக்கப் பட்டுள்ளது - உங்கள்  விவரங்களை  சரி பார்க்கலாம்  என்கிறது தேர்தல் ஆணையம்

22 ஆகஸ்ட் 2024, 11:29 PM
துணை வாக்காளர் பட்டியல் பரிசீலனைக்கு திறக்கப் பட்டுள்ளது - உங்கள்  விவரங்களை  சரி பார்க்கலாம்  என்கிறது தேர்தல் ஆணையம்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 21 - வருடாந்திர ஜூலை மாதத்திற்கான வாக்காளர் பட்டியல் (DPT BLN7/2024), சரிபார்க்கப்பட்டு இன்று  அரச பதிவேட்டில்   வெளியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19 வரை 30 நாட்களுக்கு பரிசீலனைக்கு திறந்திருக்கும் இப்பட்டியலில்  பொது மக்கள்  தங்கள் விவரங்களை சரி பார்க்கலாம் என்று தேர்தல் ஆணையத்தின் (EC) செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் தெரிவித்தார்.

புதிய வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்ட 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களின் 38,952 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளதாக அவர் கூறினார். அடையாள அட்டை படி இவர்கள் ஜூலை 1 முதல் 31 வரை இயற்கையாக  பதிவு பெற்ற  வாக்காளர்களாகும்.

"DPT BLN7/2024 இல் தொகுதிகளை மாற்றிய 8,165 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் மற்றும் நிலைகள் அல்லது வகைகளை மாற்றிய 3,730 வாக்காளர்களின் பெயர்களும் உள்ளன" என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தேர்தல் அணையத்தின் போர்டல், MySPR Semak போர்டல், மாநில தேர்தல் அலுவலகங்கள் போர்டல், ஆன்லைன் விண்ணப்பம், MySPR Semak மொபைல் ஆப்ஸ் அல்லது 03-8892 7218 என்ற வாக்காளர் பதிவு சரிபார்ப்பு ஹாட்லைன் மூலம் EC மறுஆய்வு முறைகளை சரிபார்க்கும் வசதிகளை வழங்குகிறது என்றார்.

ஜூலை 1 முதல் 31 வரை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குடிமக்கள் மற்றும் தொகுதி அல்லது அந்தஸ்து மாற்றத்திற்கு விண்ணப்பித்த வாக்காளர்களும், தங்கள் பெயர் மற்றும்  முகவரிகளை வாக்காளர் பட்டியலில்  சரிபார்க்குமாறு இக்மல்ருடின் வலியுறுத்தினார்.

“தங்கள் பெயர்கள் DPT BLN7/2024 இல் பட்டியலிடப்படவில்லை எனில், அவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தின் மூலமாகவோ அல்லது மாநில தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று படிவம் C ஐப் பூர்த்தி செய்வதன் மூலமாகவோ பதிவுக்கு உரிமை கோரலாம்.

"எந்த ஒரு தொகுதியிலும் வசிக்கும் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்ட இடத்தை விட்டு வேறு  தொகுதிகளுக்கு மாறியிருந்தாலும், அந் நுழைவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால், D படிவத்தை நிரப்பலாம் அல்லது மாநில தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்," என்று அவர் கூறினார்.

படிவம் C மற்றும் D இரண்டையும் மாநில தேர்தல் அலுவலக போர்ட்டலில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மறுஆய்வுக் காலம் முழுவதும் அலுவலக நேரத்தின்போது, ஆட்சேபனைக் கட்டணத்துடன் மாநிலத் தேர்தல் இயக்குநர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.