MEDIA STATEMENT

பந்திங்கில் நான்கு  வீடுகள் தீக்கிரை-  மூவர் தெய்வாதீனமாக உயிர்த்தப்பினர்

17 ஆகஸ்ட் 2024, 3:46 AM
பந்திங்கில் நான்கு  வீடுகள் தீக்கிரை-  மூவர் தெய்வாதீனமாக உயிர்த்தப்பினர்

ஷா ஆலம், ஆக.  17 -  பந்திங், ஜாலான் தோமானில் இன்று அதிகாலை நான்கு வரிசை  வீடுகளில்  ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தெய்வாதீனமாக உயிர்த்தப்பினர்.

தங்கள் வீட்டின் பின்புறத்தில் சிக்கியிருந்த  அக்குடும்பத்தினரை பொதுமக்கள்  காயமின்றி  பாதுகாப்பாக மீட்டதாக  சிலாங்கூர்  மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் (நடவடிக்கை) அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.

தீப்பற்றிய வீட்டிற்குள் நுழைய முயன்றபோது மீட்பு பணியில் ஈடுபட்ட ஒருவர்  கண்ணாடி துண்டுகள் குத்தி காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்  என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அதிகாலை 1.15 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வாகனங்களும் எரிந்து நாசமாயின. பந்திங்,  கேஎல்ஐஏ மற்றும் தெலுக் பங்ளிமா காராங் நிலையங்களில் இருந்து  வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.