MEDIA STATEMENT

சுக்மா 2024- மூன்று நாட்களில் சிலாங்கூருக்கு மூன்று தங்கம் உள்பட எட்டு பதக்கங்கள்

17 ஆகஸ்ட் 2024, 3:08 AM
சுக்மா 2024- மூன்று நாட்களில் சிலாங்கூருக்கு மூன்று தங்கம் உள்பட எட்டு பதக்கங்கள்
சுக்மா 2024- மூன்று நாட்களில் சிலாங்கூருக்கு மூன்று தங்கம் உள்பட எட்டு பதக்கங்கள்

ஷா ஆலம், ஆக. 17- சுக்மா போட்டியின் மூன்றாவது நாளான நேற்று திடல் போலிங் குழு ஆட்டத்தில் ஒரு தங்கப்பதக்கத்தையும் மகளிர் தனி நபர் போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் சிலாங்கூர் பெற்றது.

இதனிடையே,  ஹூசூ போட்டியின் மகளிருக்கான பிரிவில் பாட்ரிஷியா இஸாத்தி (48 கிலோ) மற்றும் ஃபெலிஸிட்டி வோங் (52 கிலோ) மூலம் இரு வெள்ளிப் பதக்கங்களையும் மகளிர் டென்பின் போலிங் போட்டியில் இந்தான் நோர் எர்டியானா நோர் அஸ்லிமான் மற்றும் அடானியா முகமது ரெட்ஸ்வான் வாயிலாக ஒரு  வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது.

இன்று சைக்கிளோட்டப் போட்டியில் யோங் மெங் கியாட் மூலமாகவும் குழு நிலையிலன குறி சுடும் போட்டியின் வாயிலாகவும் கராத்தே போட்டியில் ஸ்ரீகா மற்றும் பி.ஜீவேஷ் மூலமாகவும் தங்கப்பதக்கங்களை பெற சிலாங்கூர் இலக்கு நிர்ணயித்துள்ளது.

டென்பின் போலிங் போட்டியில் இந்தான் நோர் எர்டியானா நோர் அஸ்லிமான் மற்றும் அடானியா முகமது ரெட்ஸ்வான் 2,271 பின்களை வீழ்த்தி வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

நேற்றிரவு 10.00 நிலவரப்படி சிலாங்கூர் குழு மூன்று தங்கப்பதக்கங்களையும் ஐந்து வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளது.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.