MEDIA STATEMENT

எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பாகத் தேறிய  மாணவர்களுக்கு வெகுமதி- கோத்தா கெமுனிங் தொகுதி  வழங்குகிறது

9 ஆகஸ்ட் 2024, 3:47 PM
எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பாகத் தேறிய  மாணவர்களுக்கு வெகுமதி- கோத்தா கெமுனிங் தொகுதி  வழங்குகிறது

ஷா ஆலம், ஆக. 9-  கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற கோத்தா

கெமுனிங் சட்டமன்றத் தொகுதியிலுள்ள   பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்கப்படவிருக்கிறது.

இந்நிகழ்ச்சி வரும் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி தொடங்கி பிற்பகல் 2.00 மணி வரை எம்பிஎஸ்ஏ  ஏஸ்தர் மண்டபம், ஜாலான் கெமுனிங் டாமாய் 32/151, புக்கிட் ரீமாவ், ஷா ஆலமில் நடைபெறும் என்று ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் ராமு நடராஜன் கூறினார்.

கோத்தா கெமுனிங்  தொகுதி  சேவை மையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு சட்டமன்ற  உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமையேற்று  மாணவர்களைச் சிறப்பிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதில் 10 ஏ, 9ஏ மற்றும் 8 ஏ பெற்ற மாணவர்கள் ஊக்குவிப்பு தொகை மற்றும் நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படுவர் என்று  அவர் மேலும் சொன்னார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.