ANTARABANGSA

ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவராக யாஹ்யா சின்வார் நியமனம்

7 ஆகஸ்ட் 2024, 7:01 AM
ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவராக யாஹ்யா சின்வார் நியமனம்

காசா நகர், ஆக 7- பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு தங்களின் புதிய

அரசியல் பிரிவுத் தலைவராக யாஹ்யா சின்வாரை நியமித்துள்ளது.

கடந்த ஜூலை 31ஆம் தேதி தெஹ்ரானில் நடைபெற்ற புதிய அதிபரின் பதவியேற்புச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்றிருந்த போது படுகொலை  செய்யப்பட்ட இஸ்மாயில் ஹனியேவின் இடத்தை யாஹ்யா நிரப்பவுள்ளார்.

இந்த தகவலை ஹமாஸ் அமைப்பு டெலிகிராம் செயலி வாயிலாக

வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் கூறியதாக அனாடோலு செய்தி  நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஹனியே மரணத்திற்கு இஸ்ரேல்தான் காரணம் என ஹமாஸ் மற்றும்  ஈரான் குற்றஞ்சாட்டியுள்ள வேளையில் இஸ்ரேல் அந்த குற்றச்சாட்டை  உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

ஹமாஸ் தலைவராக சின்வார் நியமிக்கப்பட்டது எதிரிகள் (இஸ்ரேல்)  மற்றும் அதன் கூட்டு நாடுகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய சமிக்ஞை ஆகும்

என ஹமாஸ் இயக்கத்தின் உயர் அதிகாரியான சாமி அபு ஜூரி கூறினார்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.