கோல குபு பாரு, ஜூலை 22- சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பயிற்சி
பல்கலைக்கழகத்தின் (உப்ஸி) முன்னாள் மாணவியான நுர் ஃபாரா கார்தினி அப்துல்லா படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகப் பேர்வழி க்கு எதிரான தடுப்புக் காவல் மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோல குபு பாரு நீதிமன்றத்தில் காவல் துறையினர் சமர்பித்த
விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி நுருள் மர்டியா முகமது
ரெட்ஸா, சந்தேகப் பேர்வழியின் தடுப்புக் காவலை நாளை தொடங்கி வரும் ஜூலை 29 ஆம் தேதி வரை நீட்டிக்க அனுமதி வழங்கினார்.
மணியளவில் உலு பெர்ணம், கம்போங் ஸ்ரீ கிளேடாங்கில் உள்ள
செம்பனைத் தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக பெர்னாமா முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.


