MEDIA STATEMENT

நோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் மெய்க்காப்பாளருக்கு பிரதமர் அன்வார் நிதியுதவி

20 ஜூலை 2024, 7:17 AM
நோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் மெய்க்காப்பாளருக்கு பிரதமர் அன்வார் நிதியுதவி

கோலாலம்பூர், ஜூலை 20-     முன்பு தனது மெய்க்காப்பாளராக இருந்து தற்போது நோய்வாய்ப்பட்டிருக்கும் அரச மலேசிய போலீஸ் படையின்   சிறப்பு அதிரடிப் பிரிவு (யு.டி.கே.) முன்னாள் உறுப்பினரான ஹனாஃபி ஹாடிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  நிதியுதவி வழங்கினார்.

மருத்துவச் செலவு மற்றும் சிறப்பு சக்கர நாற்காலி வாங்குவதற்காக அந்த உதவித் தொகையை  தனது அரசியல் செயலாளர் அகமது ஃபர்ஹான் பவுஸி வழங்கியதாக அன்வார் இன்று தனது முகநூல் பக்கத்தில்  குறிப்பிட்டுள்ளார்

உடல், கைகள் மற்றும் கால்களின்  செயல்பாட்டை முடக்கும்  ஒரு

வகை நோயால் ஹனாஃபி பாதிக்கப்பட்டு  இப்போது படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று அவர் கூறினார்.

ஹனாபி விரைவில் குணமடைய  தாம்  பிரார்த்தனை  செய்வதாகவும்  பிரதமர்  தெரிவித்தார்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.