MEDIA STATEMENT

அடுக்குமாடி குடியிருப்பில் கத்திக் குத்து காயங்களுடன் அந்நிய நாட்டுப் பெண்ணின் உடல் மீட்பு

19 ஜூலை 2024, 5:36 AM
அடுக்குமாடி குடியிருப்பில் கத்திக் குத்து காயங்களுடன் அந்நிய நாட்டுப் பெண்ணின் உடல் மீட்பு

ஜோர்ஜ் டவுன், ஜூலை 19- இங்குள்ள பத்து மாவுங், தாமான் இண்டா அடுக்குமாடி குடியிருப்பில் கத்திக் குத்துக் காயங்களுடன் அந்நிய நாட்டுப பெண் ஒருவர் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

முப்பது வயது மதிக்கத்தக்க அப்பெண் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியின் நடைபாதையில் இரத்த வெள்ளத்தில் சுயநினைவற்ற நிலையில் கிடப்பதை பொது மக்கள் கண்டு காவல் துறைக்கு தகவல் அளித்த தாக பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் கமாருள் ரிஸால் கூறினார்.

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கு அறிகுறியாக அப்பெண்ணின் கழுத்து, நெஞ்சு மற்றும் காலில் காயங்கள் காணப்பட்டன என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சமபவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர் அப்பெண் உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தியதாக கூறிய அவர், இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இச்சம்பவம் தொடர்பில் அப்பெண்ணின் நண்பர் என நம்பப்படும் 34 வயது மியன்மார் ஆடவரை தாங்கள் விசாரணைக்காக தேடி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட அந்த ஆடவர் குறித்த தகவல் அறிந்தவர்கள் 014-9237366 என்ற எண்களில் விசாரணை அதிகாரி ஏஎஸ்பி ஏ. காந்தனைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.