MEDIA STATEMENT

சபாக் பெர்ணம், கோல சிலாங்கூரில்  மாலை 6.00 மணி வரை  கனமழை பெய்யும் 

8 ஜூலை 2024, 9:04 AM
சபாக் பெர்ணம், கோல சிலாங்கூரில்  மாலை 6.00 மணி வரை  கனமழை பெய்யும் 

ஷா ஆலம்,  ஜூலை 8-   கோல சிலாங்கூர்  மற்றும் சபாக் பெரணம் ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை  6.00 மணி வரை   இடியுடன் கூடிய பலத்த  மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

பெர்லிஸ், பினாங்கு,  பேராக்,   கெடா, பகாங், ஜோகூர், சரவாக், சபா ஆகிய மாநிலங்களிலும்    இதே வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்துறை  கூறியது.

மணிக்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமாக இடியுடன் கூடிய தீவிர மழை ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக பொழியும் என்று எதிர்பார்க்கப்படும் போது இந்த எச்சரிக்கை வழங்கப்படும் என அத்துறை தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.

இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை என்பது  ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் செல்லுபடியாகக் கூடிய ஒரு  குறுகிய கால எச்சரிக்கையாகும்.

வானிலை தொடர்பான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளம்,  சமூக ஊடகங்களைப் வலம் வரலாம். சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு myCuaca செயலியை பதிவிறக்கம் செய்யவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.