ஷா ஆலம் ஜூலை 5, இந்தியர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள முன் வரவேண்டும், சில அரசியல்வாதிகளின் அரட்டைகளிலும் மாயா ஜாலங்களில் மயங்கிடக்கூடாது. சமீப காலமாக ஒரு சிலரின் அரசியல் சித்து விளையாட்டுகள் சமுதாயத்திற்கு தீமையாக முடிவதை காணமுடிகிறது.
அண்மையில் பினாங்கை சேர்ந்த ஒரு நபர் வெளியிட்ட காணொளியில் , பேங் ராயாட் அறிவித்த 50 மில்லியன் கடன் உதவித் திட்டத்தில் ஒரு இந்திய உணவகம் கடன் பெற தகுதி பெறவில்லை என்பதற்காக, அந்த வங்கி, அரசாங்கம், ஏற்பாடு செய்த துணை அமைச்சர் என அனைவரையும் சாடியிருந்தார், அந்த காணொளியை கண்டவர்களுக்கு அந்த திட்டம் குறித்து அவநம்பிக்கை ஏற்படுத்துவதாக அது அமைந்திருந்தது.
ஆனால், அந்த வங்கியின் பிரிஃப்-ஐ கடன் உதவித் திட்டத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் இதுவரை 140 இந்திய தொழில் முனைவோர்கள் கடனுதவிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் .பேங் க் ராக்யாட் பிரிஃப்-ஐ திட்டத்தின் கீழ் 43 பேருக்கு 3.8 மில்லியன் கடன் உதவி அங்கீகரிக்க பட்டுள்ளதாகவும் டத்தோ ரமணன் நாடாளுமன்றத்தில் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அது எதை காட்டுகிறது ? சமுதாயத்திற்கு கீழறுப்பு செய்
அதேப் போல் ஒரு மாணவியின் மெட்ரிக்குலேசன் பற் றிய கேள்விக்கு தகுதி அடிப்படையை நிர்ணயிப்பதில் உள்ள சில சிக்கல்களை கருத்தில் கொண்டு சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என பிரதமர் விடை அளித்திருந்தார். அதனை பரவலாக கிண்டல் அடித்தவர்கள், அரசியல் ஆக்கியவர்கள், 10 A க்கள் பெற்ற மாணவர்களுக்கு கூட மெட்ரிகுலேசன் வாய்ப்பு கிடைப்பதில்லை என பிரச்சாரம் செய்தார்கள்.
உண்மையில் 6A க்களுக்கு மேல் பெற்ற கிராமப்புற \ தோட்டப்புற இந்திய மாணவர்கள் பலர் மெட்ரிகுலேசன் கல்வி வழி பல்கலைக்கழகங்களுக்கு சென்றுள்ளார்கள். இருப்பினும், அந்த சாடலுக்கு பதிலளிக்கும் வண்ணம் 6A, 7A, 8A பெற்ற இந்திய மாணவர்களின் தரவுகளை அம்பலப்படுத்தி , மாணவர்களுக்கு அரசாங்கம் மற்றும் அரசாங்க தலைவர்கள் சங்கடம் ஏற்படுத்த வில்லை
இப்பொழுது அரசு அந்த சாடலுக்கு பதிலளிக்கும் வண்ணம் ,10A பெறும் அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேசன் இடம் என்றவுடன், 6A க்கு மேல் பெற்றவர்களும் சிறந்த மாணவர்களே அவர்களின் வாய்ப்பை கல்வி அமைச்சு பறித்து விட்டதாக குதிக்கிறவர்களும் அதே அரசியல்வாதிகள்தான் ! என்பதை சமுதாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆக, அவர்களின் அக்கறை சமுதாய நலனில் இல்லை, கைத்தட்டல் வாங்குவதில் தான் உள்ளது, ஒரு அறிக்கையின் பின் விளைவுகள் குறித்து அவர்களுக்கு அக்கறையில்லை. இவர்களை நம்பி சமுதாயம் பயணிக்க போகிறதா ? என்பதே கேள்வி.
இதை போன்று பல விவகாரங்களில் சில சந்தர்ப்பவாதிகள் தங்கள் எண்ணங்களை ஈடேற்றிக்கொள்ள போடும் கபட நாடகத்தை சமுதாயம் உணர்ந்து எச்சரிக்கையாக நடக்காவிட்டால், அது நமக்கே கேடாக விளையும் என்பதை கருத்தில் கொண்டு, உரிமை என எண்ணி எருமை மீது ஏறாமல் இருக்க வேண்டும் என்கிறார் கெஅடிலான் மகளீர் தேசிய உதவித் தலைவருமான சங்கீதா ஜெயக்குமார்.







