ANTARABANGSA

காஸா போரில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37,232 பேராக உயர்வு

14 ஜூன் 2024, 4:53 AM
காஸா போரில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37,232 பேராக உயர்வு

காஸா, ஜூன் 14- காஸா தீபகற்பம் மீது இஸ்ரேலியப் படைகள்

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் நடத்தி வரும்

தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,323 பேராக

அதிகரித்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் நேற்று கூறின.

மேலும், இந்த தாக்குல்களில் இதுவரை 85,037 பேர் காயமடைந்துள்ளதாக

பாலஸ்தீன செய்தி மற்றும் தகவல் நிறுவனம் (வாஃபா) தெரிவித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் காஸா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில்

மேலும் 30 பேர் பலியானதோடு 105 பேர் காயமுற்றனர்.

பாதிக்கப்பட்ட இடங்களை மீட்புக் குழுவினர் அடைய முடியாத சூழலில்

மேலும் பெரும் எண்ணிக்கையிலானோர் கட்டிட இடுபாடுகளிலும்

சாலைகளிலும் சிக்கித் தவிப்பதாக வட்டாரங்கள் கூறின.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.