சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் சோதனையில் 260 சட்டவிரோத விளம்பரங்கள் பறிமுதல்

19 மே 2024, 7:47 AM
சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் சோதனையில் 260 சட்டவிரோத விளம்பரங்கள் பறிமுதல்

ஷா ஆலம், மே 19- சிப்பாங் நகராண்மைக் கழகம் தாமான் மாவார் சாலாக் திங்கி மற்றும் ஜாலான் ஜெண்டேராம் சாலாக்கில் கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 260 சட்டவிரோத விளம்பரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நகராண்மைக் கழகத்தின் விளம்பர அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட இந்த சோதனையில் சம்பந்தப்பட்ட விளம்பர உரிமையாளர்களுக்கு எதிராக 10 குற்றப்பதிவுகளும் வெளியிடப்பட்டன.

லைசென்ஸ் அல்லது அனுமதி பெர்மிட் இல்லாத விளம்பரங்களுக்கு எதிராக 2007ஆம் ஆண்டு (எம்.பி.சிப்பாங்) விளம்பர துணைச் சட்டத்தின் 7வது அதிகாரத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராண்மைக் கழகம் கூறியது.

லைசென்ஸ் இன்றி விளம்பரப் பலகை வைத்திருக்கும் உரிமையாளர்கள் அதற்கான உரிமம் பெறுவதற்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது.

பறிமுதல் செய்யப்பட்ட விளம்பரங்களில் கடனளிப்பு, சாலை வரி புதுப்பித்தல், காப்புறுதி மற்றும் சமையலறை கேபினட் தொடர்பானவையும் அடங்கும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.