உலு திராம் போலீஸ் நிலையத் தாக்குதல்- சிங்கப்பூர் கடும் கண்டனம்

18 மே 2024, 3:09 AM
உலு திராம் போலீஸ் நிலையத் தாக்குதல்- சிங்கப்பூர் கடும் கண்டனம்

சிங்கப்பூர், மே 18 - இரண்டு போலீஸ்காரர்கள்  கொல்லப்பட்டதற்கு மற்றொருவர் காயமடைவதற்கும் காரணமான ஜோகூர்,  உலு திராம் காவல் நிலையம் மீதான  தாக்குதல் சம்பவத்திற்கு  சிங்கப்பூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின்  குடும்பங்களுக்கு எங்கள் அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவிக்கிறோம். அதே வேளையில்   காயமடைந்த அதிகாரி விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் என்று  வெளி விவகார  அமைச்சு ஒரு அறிக்கையில் கூறியது.

கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரம்  மற்றும் ஜோகூர் பாருவில் உள்ள சிங்கப்பூர் தூதரக அலுவலகம் நிலைமையை அணுக்கமாகக்  கண்காணித்து வருகின்றன என அது தெரிவித்தது.

மலேசியாவில் இருக்கும் அல்லது பயணிக்கும் சிங்கப்பூர் பிரஜைகள் விழிப்புடன் இருக்கவும் தங்களின்  பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அமைச்சு அறிவுறுத்தியது.

மலேசியாவுக்குப் பயணம் செய்யும் சிங்கப்பூரர்கள்  இணையதளத்தின் மூலம் வெளிவிவகார அமைச்சுடன்  இ-ரிஜிஸ்டரில் பதிவு  செய்ய வேண்டும். இதன் மூலம்  நாங்கள் உங்களை அவசர காலத்தில் தொடர்பு கொண்டு  உதவலாம் என்று அமைச்சு தெரிவித்தது.

வெளி நாடுகளுக்குச் செல்லும் சிங்கைப் பிரஜைகள்  அனைவரும் விரிவான மருத்துவ மற்றும் பயணக் காப்பீடுகளை வாங்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

நேற்று அதிகாலை 2.45 மணியளவில் நிகழ்ந்த இந்த தாக்குதல்  சம்பவத்தில், இரண்டு போலீஸ்காரர்கள்  பலியானதோடு மேலும் ஒருவர் காயமுற்றார். மற்றொருவர் காயமடைந்தார்.

ஜெமா இஸ்லாமியா அமைப்பைச் சேர்ந்தவர் என நம்பப்படும்   தாக்குதல்காரர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.