சிப்ஸ் மாநாட்டின் வழி வெ.700 கோடி பரிவர்த்தனையை பதிவு செய்ய இன்வெஸ்ட் சிலாங்கூர் இலக்கு

11 மே 2024, 9:20 AM
சிப்ஸ் மாநாட்டின் வழி வெ.700 கோடி பரிவர்த்தனையை பதிவு செய்ய இன்வெஸ்ட் சிலாங்கூர் இலக்கு

பேங்காக், மே 11 -  இவ்வாண்டு  நடைபெறும் சிலாங்கூர் அனைத்துலக  வர்த்தக உச்சநிலை மாநாட்டின் (சிப்ஸ்) மூலம் 700 கோடி வெள்ளி மதிப்பிலான  சாத்தியப் பரிவர்த்தனையை பதிவு செய்ய இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு சிப்ஸ் மாநாட்டிற்கு  அமோக வரவேற்பு கிடைத்ததைத்  தொடர்ந்து, அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப இம்மாநாடு இந்த முறை ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும் என்று இன்வெஸ்ட் சிலாங்கூர் தலைமைச்

செயல்முறை அதிகாரி டத்தோ ஹசான் அஸ்ஹாரி இட்ரிஸ் கூறினார்.

.

கடந்த ஆண்டில் 600 கோடி வெள்ளி  சாத்திய பரிவர்த்தனை மதிப்பை நாங்கள் பதிவு செய்தோம். எனவே இவ்வாண்டு 100 கோடி வெள்ளியை அதிகமாகப் பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாண்டிற்கான முதல் தொடர் ஜூலை 25 முதல் ஜூலை 27 வரை    இரண்டாவது தொடர் அக்டோபர் 16 முதல்  19 வரையிலும் நடைபெறும்  என்று அவர் இன்று உச்சநிலை மாநாட்டை பிரபலப்படுத்தும் நிகழ்வுக்குப்  பிறகு பெர்னாமாவிடம் கூறினார்.

இந்த மாநாட்டையொட்டி நடைபெறும்  வர்த்தகக் கண்காட்சியில் சுமார் 60,000 பார்வையாளர்கள் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

சிப்ஸ் என்பது சிலாங்கூர் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட வருடாந்திர வர்த்தக  நிகழ்வாகும் சிலாங்கூர் அரசின் முன்னெடுப்பில் இந்நிகழ்வை இன்வெஸ்ட் சிலாங்கூர் நடத்துகிறது

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.