இஸ்ரேலின் தொடர் தாக்குதலின் எதிரொலி- பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 34,700 ஆக உயர்வு

6 மே 2024, 5:01 AM
இஸ்ரேலின் தொடர் தாக்குதலின் எதிரொலி- பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 34,700 ஆக உயர்வு

அங்காரா, மே 6- காஸா தீபகற்பம் மீது கடந்தாண்டு அக்டோபர் மாதம்

முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல்களில் பலியான

பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 34,683 பேராக உயர்ந்துள்ளது.

இந்த தாக்குதல்களில் மேலும் 78,018 பேர் காயமுற்றுள்ளதாகக்

காஸாவிலுள்ள சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்று

கூறியது.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட

தாக்குதல்களில் 29 போ உயிரிழந்ததோடு மேலும் 110 பேர் காயமுற்றதாக

அந்த அறிக்கையை மேற்கோள் காட்டி அனாடோலு ஏஜென்சி செய்தி

வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களை மீட்புப்பணியாளர்களால் அடைய முடியாத

காரணத்தால் மேலும் பலர் கட்டிட இடிபாடுகளிலும் சாலைகளிலும்

உதவிக்காக காத்திருக்கின்றனர் என்று அது குறிப்பிட்டது.

கடந்த ஆறு மாதக் காலமாக நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதல்களில்

அங்குள்ள சுமார் 85 விழுக்காட்டு கட்டிடங்களும் குடியிருப்புகளும்

தரைமாட்டமாகி விட்டன. மேலும் கட்டுப்பாடுகள் காரணமாக உணவு,

சுத்தமான நீர் மற்றும் மருந்துப் பற்றாக்குறையை பாதிக்கப்பட்ட மக்கள்

எதிர்நோக்கி வருகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.