MEDIA STATEMENT

நம்பிக்கை கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு திரட்டுவதில்  அம்னோவும் களத்தில் இறங்கியது

1 மே 2024, 5:21 PM
நம்பிக்கை கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு திரட்டுவதில்  அம்னோவும் களத்தில் இறங்கியது

செய்தி ; சு.சுப்பையா

கோல குபு பாரு மே.1- கோல குபு பாரு சட்ட மன்ற  தொகுதியில்  உள்ள மலாய் அரசு சாரா அமைப்பு உறுப்பினர்களுடன் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பை உலு சிலாங்கூர் அம்னோ நடத்தியது. இந்த உபசரிப்பில்  அனைத்துலக வாணிபம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் துங்கு சப்ருல் மற்றும் சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி புசார் டான் ஸ்ரீ முகமட் தாயிப் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

இந்த ஹரி ராயா விருந்து உபசரிப்பில் 500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கலந்துக் கொண்டனர். நம்பிக்கை கூட்டணி அம்னோ வேட்பாளர்கள் வெற்றிக்கு கடுமையாக பாடு பட்டது. அதே போல் அம்னோவும் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் புவான் பாங்கின் வெற்றிக்கு பாடு பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் தகவல் தொடர் துறை துணை அமைச்சர் தியோ நீ சிங், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வொங் சென் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

நேற்று நீதித் துறை அமைச்சர் டத்தோ அசலினா ஓத்மானும் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் புவான் பாங்கிற்கு ஆதரவு தெரிவித்து கோல குபு பாருவில் வாக்கு வேட்டையாடினார். நம்பிக்கை கூட்டணி வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதில் அம்னோ தீவிரம் காட்டி வருகிறது.

அன்றாடம் அம்னோ தலைவர்கள் கோல குபு பாரு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக் கொள்கின்றனர்.  எதிர் வரும் வெள்ளிக் கிழமை இரவு மா பெரும் பிரச்சாரக்கூட்டத்தை நடத்த விருக்கின்றனர் என்பது குறிப்பிட தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.