MEDIA STATEMENT

நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக அரசு ஊழியர்களுக்கு 13% சம்பள உயர்வு- டிசம்பரில் அமல்

1 மே 2024, 10:28 AM
நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக அரசு ஊழியர்களுக்கு 13% சம்பள உயர்வு- டிசம்பரில் அமல்

புத்ராஜெயா, மே 1-  அரசு ஊழியர்களுக்கு  நாட்டின் வரலாற்றில் மிக உயர்ந்த மற்றும் சிறந்த சம்பள உயர்வை   பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  இன்று அறிவித்தார். இந்த 13 விழுக்காட்டுச் சம்பள உயர்வு வரும் டிசம்பர் மாதம் அமலுக்கு வருகிறது.

இந்த சம்பள உயர்வு 1,000 கோடி வெள்ளிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டை உள்ளடக்கியுள்ளதாக  அவர் கூறினார்.

இந்த சம்பள உயர்வு  13 சதவீதத்தை விட அதிகமாகும். மடாணி அரசாங்கத்தின் வரலாற்றில் இது மிகச் சிறந்த அதிகரிப்பாகும் என  இன்று தேசிய நிலையிலான தொழிலாளர் தினத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டார்.

அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச வருமானம் மாதத்திற்கு 2,000 வெள்ளிக்கும் அதிகமாக இருப்பதை  உறுதிசெய்யும் வகையில் பொதுச் சேவைத் துறை  சம்பள  முறையை (எஸ்.எஸ்.பி.ஏ.) அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது, சம்பளம் மற்றும் நிலையான அலவன்ஸை உள்ளடக்கிய   அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச வருமானம்  மாதம் 1,795 வெள்ளியாகும் எனவும்  என்று பிரதமர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.