MEDIA STATEMENT

ஒற்றுமை அரசின் வேட்பாளருக்கு மக்களின் பிறந்தநாள்  கேக்

27 ஏப்ரல் 2024, 7:06 AM
ஒற்றுமை அரசின் வேட்பாளருக்கு மக்களின் பிறந்தநாள்  கேக்

செய்தி.  சு.சுப்பையா

கோல குபு பாரு  .ஏப்.27- கோல குபு பாரு இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசின் வேட்பாளராக ஜ.செ.க.வை சேர்ந்த  இளம் பட்டத்தாரியான புவான் பாங் சொக் தாவ் போட்டியிகிறார். இவருக்கு நேற்று பிறந்தநாள். நேற்று கோல குபு பாரு ஜ.செ.க. அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.

இன்று வேட்பு மனு தாக்கல் நிறைவுக்கு  பின், அணிவகுப்புக்கு முன்னின்று வழி நடத்திய நான்கு சக்கர வாகனத்தில் இருந்து ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். அதன் பின் அலுவலகத்திக்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது அவருக்கு இன்ப அதிர்ச்சி  வழங்கினார் வயதான கேக் கடை உரிமையாளர்.

அக்கடை  உரிமையாளர்  புவான் பாங்கை அழைத்து பிறந்தநாள் கேக் வெட்டும் படி கேட்டுக் கொண்டார். அவர்கள் அன்பான அழைப்பையேற்று புவான் பாங் அவர்கள் தயாரித்து வைத்திருந்த கேக்கை வெட்டி மகிழ்ந்தார். மேலும் வயதான இரு முதியவர்கள் காலை தொட்டு வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

இந்த இடைத்தேர்தலில் மீண்டும் கோல குபு பாரு நமது கோட்டையாக தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் ஆதரவாளர்களை நோக்கி கேட்டுக் கொண்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.