MEDIA STATEMENT

இரு நான்கு சக்கர இயக்க வாகனங்கள் மோதல்- மூவர் பலி, ஐவர் காயம்

27 ஏப்ரல் 2024, 3:17 AM
இரு நான்கு சக்கர இயக்க வாகனங்கள் மோதல்- மூவர் பலி, ஐவர் காயம்

கோல கிராய், ஏப் 27- கோல கிராய்-மூவா மூசாங் சாலையில் நேற்றிரவு நிகழ்ந்த இரு நான்கு சக்கர இயக்க வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்ததோடு மேலும் ஐவர் கடுமையான காயங்களுக்குள்ளாயினர்.

நேற்று பின்னிரவு 12.36 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் இரு ஆடவர்களும் மூன்று பெண்களும் உயிரிழந்தனர் என கிளந்தான் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அப்பேச்சாளர் சொன்னார். அங்கு டோயோட்டா ஹைலக்ஸ் மற்றும் போர்ட் ரேஞ்சர் ரக வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளதை அவர்கள் கண்டனர். விபத்துக்குள்ளான வாகனங்களில் சிக்கிக் கொண்டவர்களை தீயணைப்பு வீரர்கள் விரைந்து மீட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் மூவர் சம்பவ இடத்திலியே உயிரிழந்த வேளையில் மேலும் ஐவர் காயங்களுக்குள்ளாயினர் என்று அவர் மேலும் கூறினார்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கோல கிராய் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக கூறிய அவர், இவ்விபத்தில் டோயோட்டா ஹைலக்ஸ் வாகனத்தில் பயணித்த இருவரும் போர்ட் ரேஞ்சர் வாகனத்தில் பயணம் செய்த பெண்ணும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.