MEDIA STATEMENT

இடைத் தேர்தலை முன்னிட்டு கோல குபு பாருவில் ஊடக மையம்- அமைச்சு தகவல்

27 ஏப்ரல் 2024, 2:43 AM
இடைத் தேர்தலை முன்னிட்டு கோல குபு பாருவில் ஊடக மையம்- அமைச்சு தகவல்

உலு சிலாங்கூர், ஏப் 27 -  கோல குபு பாரு இடைத் தேர்தலை முன்னிட்டு தகவல் இலாகாவுடன் இணைந்து தகவல் தொடர்பு அமைச்சு ஊடக மையத்தை அமைத்துள்ளது.

இந்த மையம் ஜாலான் பகாங்கில் உள்ள உலு சிலாங்கூர் அம்னோ கட்டிடத்தின் நிலை 1 இல் உள்ள கோல குபு பாரு தேசிய தகவல் பரப்பு மையத்தில் (நாடி) அமைந்துள்ளது.

இன்று தொடங்கி மே 11ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை  இந்த மையம் செயல்படும்.

இங்கு  வழங்கப் பட்டுள்ள வசதிகளைப் பயன்படுத்தி ஊடக மையத்திலிருந்து செய்திகளை அனுப்ப  ஊடக பிரதிநிதிகள்   அழைக்கப் படுகிறார்கள் என்று அமைச்சு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேல் விபரங்களுக்கு  012-3420989 என்ற எண்ணில் முகமது  ஹிகல் அரிபின் மற்றும் 012-3677134 என்ற எண்ணில் முகமது ஃபைஸ் அம்சார் முகமது ஆரிப் ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.