MEDIA STATEMENT

மக்கள் நீதிக் கட்சியின் (கெஅடிலான்) 25 வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை க்கு மாற்றப்பட்டுள்ளது

16 ஏப்ரல் 2024, 12:32 PM
மக்கள் நீதிக் கட்சியின் (கெஅடிலான்) 25 வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை க்கு மாற்றப்பட்டுள்ளது

கோலாலம்பூர், ஏப்.16: ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறவிருந்த மக்கள் நீதிக் கட்சியின் 25ஆம் ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு சிலாங்கூர் ராஜா மூடா மூசா மண்டபத்திலிருந்து, ஷா ஆலமிலிருந்து ஐடியல் கன்வென்ஷன் சென்டர் (ஐடிசிசி), ஷா ஆலமிற்கு இடம் மாற்றப்பட்டதாக என அதன் தகவல் பிரிவுத்  தலைவர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

"அசல் தேதி ஏப்ரல் 28 ஆகும், ஆனால் அது ஏப்ரல் 21க்கு  மாற்றப்பட்டுள்ளது. இந்நிகழ்வு ஐடிசிசியில் நடைபெறும்," என்று அவர் இன்று பெர்னாமா விடம் சுருக்கமாக கூறினார்.

இந்த நிகழ்விற்குப் பிறகு மக்கள் நீதிக் கட்சியின் 25 ஆண்டு கொண்டாட்டம் 11 மே 2024 இரவு அன்று செந்தூல் டிப்போவில் நடைபெற ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இந்த நிறைவு விழாவில் மக்கள் நீதிக் கட்சியின் தலைவராகிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் முக்கிய உரையும் இடம்பெறும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.