கே.எல்.ஐ.ஏ துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 11 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலம் பதிவு

15 ஏப்ரல் 2024, 7:58 AM
கே.எல்.ஐ.ஏ துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 11 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலம் பதிவு

சிப்பாங், ஏப் 15: கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் (கே.எல்.ஐ.ஏ) நேற்று காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ 11 சாட்சிகளிடமிருந்து காவல்துறயினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

வாக்குமூலம் அளித்தவர்களில் சுடப்பட்ட மெய்க்காப்பாளர், சந்தேக நபரின் மனைவி, விமான நிலையத்தின் பாதுகாப்புக் காவலர்கள், காவல்துறையினர் மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர்களும் அடங்குவர் என சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறினார்.

"வணிகர்கள், குடும்ப உறுப்பினர்கள் (சந்தேக நபர் மற்றும் பாதிக்கப்பட்டவர்) மற்றும் விசாரணைக்கு உதவக்கூடிய பல நபர்களை வாக்குமூலம் பெற அழைப்போம்," என அவர் இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

சந்தேக நபரைக் காவல்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், அந்நபர் இன்னும் நாட்டில் இருப்பதாக நம்புவதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் வேறு எந்த நபருக்கும் தொடர்பு இல்லை என்றும் சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் சிசிடிவி மூலம் சந்தேகநபரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஹுசைன் கூறினார்.

 

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.