MEDIA STATEMENT

சுங்கை பூலோ வில் கோலாகல சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்

14 ஏப்ரல் 2024, 2:05 PM
சுங்கை பூலோ வில் கோலாகல சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்
சுங்கை பூலோ வில் கோலாகல சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்
சுங்கை பூலோ வில் கோலாகல சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்

செய்தி ; சு.சுப்பையா

சுங்கை பூலோ.14- சுங்கை பூலோ நாடாளுமன்ற அளவில் சித்திரை புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சருமான டத்தோ ரமணன் தலைமையில் கொண்டாடப் பட்டது.

சுங்கை பூலோ கம்போங் பாருவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 500க்கும் மேற்பட்ட இந்துக்கள் கலந்து சிறப்பித்தனர். கோவில் நிர்வாகம் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு வர்ணம் தீட்டும் போட்டி நடத்தியது.

இத்தொகுதியில் உள்ள ஆர்.ஆர்.ஐ. மற்றும் சுங்கை பூலோ தமிழ்ப்பள்ளி மாணவர்களும் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கூடுதலாக தலா ஒருவருக்கு ரி.ம. 500.00 கொடுத்து கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்று டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.

4ஆம், 5ஆம், 6ஆம் ஆண்டு மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற 9 மாணவர்களுக்கு மொத்தம் 4,500.00 கொடுத்து கௌரவித்தார்.

மேலும் புத்தாண்டை ஒட்டி கோவிலுக்கு வருகை தந்த 300 சிறார்க்ளுக்கு இனிப்பு பலகாரம் மற்றும் ரி.ம. 50.00 கொடுத்து கௌரவித்தார். இதே போல் வறுமையில் வாடும் வசதி குறைந்த 150 இந்திய குடும்பங்களுக்கு சமையல் பொருட்கள் கொடுத்து உதவினார்.

சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் என்பதால் மகளிர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர். மகளிர்களுக்கு கோலம் போடும் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு ரொக்கம் சன்மானமாக கொடுத்து சிறப்பித்தார்.

சுங்கை பூலோ கம்போங் பாரு அல்லது வெல்பர் என்று அழைக்கப்படும் இவ்வாலயத்தில் காலை 9.00 மணி முதல் சுற்று வட்டார இந்துக்கள் திரளாக கலந்து கொண்டனர். நண்பகல் 1.00 வரை புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்த கொண்டாட்டத்திற்கு பிறகு டத்தோ ரமணன் சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 இந்து ஆலயங்களுக்கு சென்று மானியம் வழங்கி சிறப்பித்தார். தனது நாடாளுமன்ற அலவன்ஸ் எடுத்துக் கொள்ளாமல் பொது மக்களுக்கும் வழி பாட்டு தளங்களுக்கும் ஆண்டுதோறும் கொடுத்து வருகிறார்.

கடந்த ஆண்டு மட்டும் ரி.ம. 332,000.00 மானியமாக கொடுத்து சிறப்பித்தார். இவ்வாண்டு சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி 6 ஆலயங்களுக்கு தனது மானியத்தை கொடுத்ததின் வழி பொதுத் தேர்தல் வாக்குறுதியை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்.

இந்நிகழ்வில் ஆலய அறங்காவலர் டத்தோ ரத்தினம், சிறப்பு செயலாளர் டத்தோ அன்பு மணி , நாடாளுமன்ற அதிகாரி தமிழ் செல்வம் மற்றும் சுற்று வட்டார இந்திய அரசியல் தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் சைவ உணவு வழங்கப்பட்டது. இன்றைய சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான மொத்த செலவு தொகையையும் டத்தோ ரமணன் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.