MEDIA STATEMENT

 போலீசார் சோதனையில் இருந்து தப்பிக்க கார்ப்ரலை மோதிய இளைஞர்கள்

31 மார்ச் 2024, 1:08 AM
 போலீசார் சோதனையில் இருந்து தப்பிக்க  கார்ப்ரலை மோதிய  இளைஞர்கள்

பட்டர்வொர்த், மார்ச் 30: இன்று அதிகாலை வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 121.5 இல் தெரு பந்தயத்தில் ஈடுபட்ட கும்பல், போலீஸ்  சோதனை நடவடிக்கையில் கைது செய்வதில் இருந்து தப்பிக்க  ஒரு போலீஸ்காரரை மோதியதில், போலீஸ்காரர் உடலின் பல பகுதிகளில் காயமடைந்தார்.

செபராங் பிராய் உத்தாரா மாவட்ட காவல்துறைத் தலைவர் (எஸ்பியு) சுப்ட் சிட்டி நோர் சலவதி சாத் கூறுகையில், கார்ப்ரல் தரத்தில் உள்ள 33 வயது ஆண் காவலருக்கு இடது விலா எலும்பு முறிவு, இடது கால் வீங்கி, தலையில் மூளையதிர்ச்சி மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டதாக கூறினார்.

"காவல்துறை அதிகாரிகள் குழு இன்று அதிகாலை 3 மணிக்கு தொடங்கி கம்பங் தெலுக் மற்றும் பட்டர்வொர்த் வெளிவட்ட சாலை (பிஓஆர்ஆர்) சுற்றி நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

"கண்காணிப்பின்  போது, அப்பகுதியில் பல மோட்டார் சைக்கிள் குழுக்கள் கூடி ஆபத்தான முறையில் சவாரி செய்துள்ளனர். குறிப்பாக இரண்டு  இளைஞர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களை ஆபத்தான முறையில் ஓட்டுவதை கண்ட போலீசார் அவர்களை பின் தொடர்ந்தனர்.

அவர்கள் கிலோமீட்டர் 121.5 க்கு வந்த போது, மோட்டார் சைக்கிள்களில் சென்ற  இளைஞர்களில்  ஒருவர் திடீரென மோட்டார் சைக்கிளை கார்போரல் மீது மோதியதில், போலீஸ்காரர்கள்  இருவரும் விழுந்தனர் என்று சிட்டி நோர் சலாவதி கூறினார்.

"காயமடைந்த காவலர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டனர், குற்றவியல் சட்டத்தின் 353 மற்றும் 186 பிரிவுகளின் படி மேலதிக விசாரணைக்காக 19 மற்றும் 20 வயதுடைய இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் தடுத்து வைத்தனர்," என்று அவர் கூறினார்.

சோதனையில் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஒன்று போலியான பதிவு எண்ணை பயன் படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது, மேலும் போலீசார் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றி, ஓட்டுநர் உரிமம், சாலை வரி மற்றும் காப்பீடு இல்லாததால், மோட்டார் சைக்கிளை மாற்றியமைத்ததற்காக அவர்களுக்கு எதிராக சம்மன் வழங்கப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.