MEDIA STATEMENT

போலீசாருடன் துப்பாக்கிச் சூடு- ஆயுதயேந்திய ஐந்து கொள்ளையர்கள் பலி

30 மார்ச் 2024, 5:14 AM
போலீசாருடன் துப்பாக்கிச் சூடு- ஆயுதயேந்திய ஐந்து கொள்ளையர்கள் பலி

கோலாலம்பூர், மார்ச் 30- சிலாங்கூர் மாநிலத்தின்  புத்ரா ஹைட்ஸ்  பகுதியில் ஆயுதமேந்தி கொள்ளையிட்டு வந்ததாக    சந்தேகிக்கப்படும் ஐந்து குற்றவாளிகளை போலீஸார் நேற்றிரவு சுட்டுக் கொன்றனர்.

​​ சுமார் 11.30 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தை சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் பெர்னாமாவிடம் உறுதிப் படுத்தினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என்று அவர் சுருக்கமான பதிலில் தெரிவித்தார்.

அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட போலீஸ் குழு ஒன்று  சந்தேகத்திற்குரிய வாகனத்தை சோதனைக்காக நிறுத்த முயன்ற போது இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்  நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

போலீசாரிடமிருந்து  தப்பியோட முயன்ற சந்தேகப் பேர்வழிகள்  போலீசாரை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன்  போலீஸ் வாகனத்தின் பின்புறம் மோதியுள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.