MEDIA STATEMENT

ஷா ஆலம் விரைவுச் சாலையில் மே 19 வரை  மோட்டார் சைக்கிள் வழித்தடம் மாற்றம்

30 மார்ச் 2024, 2:06 AM
ஷா ஆலம் விரைவுச் சாலையில் மே 19 வரை  மோட்டார் சைக்கிள் வழித்தடம் மாற்றம்

கோலாலம்பூர், மார்ச் 29 ஷா ஆலம் விரைவுச் சாலையில்  மோட்டார் சைக்கிள் போக்குவரத்து தடத்தை மாற்றியமைக்கும் திட்டத்தை மேற்கு கடற்கரை எக்ஸ்பிரஸ்வே சென். பெர்ஹாட் நிறுவனம்  (டபள்யூ.சி.இ.)  நாளை முதல் வரும் மே 19 வரை செயல்படுத்துகிறது.

ஷா ஆலம் விரைவுச் சாலையின்  24.2 முதல் 23.3 கிலோ மீட்டர் வரையிலானப் பகுதியின்  (கிள்ளான் நோக்கிச் செல்லும்)  தடம் மாற்றம் உள்ளடக்கியிருக்கும் என்று டபள்யூ.சி

இ. கூறியது

ஷா ஆலம் விரைவுச் சாலையில் அடுக்குச் சாலை சந்திப்பு  (தைப்பிங்-பந்திங்) கட்டுமானத்தை எளிதாக்கும் நோக்கில் இந்த வழித்தட மாற்றம் அமல்படுத்தப்படுகிறது  என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஷா ஆலம் விரைவுச் சாலையைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகள்  கவனமாக வாகனத்தைச் செலுத்தும்  அதே வேளையில் போக்குவரத்து அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றி நடக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.