ANTARABANGSA

அல்-ஷிஃபா மருத்துவமனை மீதான முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்து

24 மார்ச் 2024, 8:55 AM
அல்-ஷிஃபா மருத்துவமனை மீதான முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்து

அம்மான், மார்ச் 24 - காஸா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை மீதான முற்றுகையை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் உடனடியாக அகற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர்  டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு காசாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை மீதான தாக்குதல் தொடங்கியது முதல் அம்மருத்துமனையின்  சுகாதாரப் பணியாளர்களுடனான தொடர்பை உலக சுகாதார நிறுவனம் மற்றும் அதன் சகாக்கள் இழந்துள்ளனர். மேலும் நோயாளிகளின் நிலை மற்றும் அவர்கள் தேவையான கவனிப்பைப் பெறுகிறார்களா என்பதைப் பற்றிய தகவல்களை நாங்கள் தேடுகிறோம் டெட்ரோசை மேற்கோள் காட்டி என்று ஜோர்டான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அல்-ஷிஃபா மருத்துவமனையை அணுகுவது இப்போது சாத்தியமற்றது. மேலும் சுகாதாரப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன என்று மேலும் கூறினார்.

ஐம்பது  சுகாதாரப் பணியாளர்கள் (அவர்களில் பெரும்பாலானோர் ஜூனியர் மருத்துவர்கள் அல்லது தன்னார்வத் தொண்டர்கள்) மற்றும் 143 நோயாளிகள்  தாக்குதலின் இரண்டாவது நாளிலிருந்து  கட்டிடத்தின் ஒரு பகுதியில்   உணவு, தண்ணீர் மற்றும் ஒரே ஒரு செயல்படாத கழிப்பறைக்கு மத்தியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கெப்ரேயஸ் குறிப்பிட்டார்.

நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ளனர். பலர் அடிப்படை மருத்துவ பொருட்கள் மற்றும் மருந்துகள் இல்லாமலும்   பராமரிக்க ஆளின்றியும் தரையில்  தனியாகக் கிடக்கிறார்கள்.

சுகாதார ஊழியர்கள் நோயாளிகளுக்கு அவசர உதவிகளைக்  கோரியுள்ளனர். இந்த நிலைமைகள் முற்றிலும் மனிதாபிமானமற்றவை. முற்றுகையை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சையைப் பெறுவதை உறுதிசெய்ய பாதுகாப்பான முறையில் அணுகுவதற்கான வாய்ப்பை கோருகிறோம் என்று கெப்ரேயஸ் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.