சுகாதார அமைச்சு மருத்துவமனைகளில் 23 வெப்ப பக்கவாத சம்பவங்கள் பதிவ

16 மார்ச் 2024, 4:50 AM
சுகாதார அமைச்சு மருத்துவமனைகளில் 23 வெப்ப பக்கவாத சம்பவங்கள் பதிவ

 புத்ராஜெயா, மார்ச் 16- இவ்வாண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்த  திங்கள்கிழமை வரை மலேசிய சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளில்   மொத்தம் 23 வெப்ப பக்கவாத சம்பவங்கள்  பதிவாகியுள்ளன என்று சுகாதாரத் துறைத் தலைமை இயக்குநர்  டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.

கெடா, பேராக், சிலாங்கூர், சபா, பெர்லிஸ் மற்றும் பகாங் ஆகிய இடங்களில் இத்தகைய சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று 2024 ரமலான் சந்தை  உணவு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு இயக்க  நிகழ்வுக்குப் பிறகு இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்  அவர் தெரிவித்தார்.

வெப்ப பக்கவாதச் சம்பவங்களின்   எண்ணிக்கையை மொத்தமாகச்  சேர்த்தால் தற்போது எங்களிடம் 23 புகார்கள் உள்ளன. இது எங்கள் மருத்துவமனைக்கு வரும் சம்பவங்களின் அடிப்படையிலானது என்று அவர் கூறினார்.

பதிவான வழக்குகளைப் பொறுத்தவரை, லங்காவியில் ஒரு நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார் என்று  டாக்டர் முகமது ராட்ஸி கூறினார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு   சுவாச உதவி தேவைப்பட்டது. ஆனால் அவர் சீக்கிரம் சிகிச்சைக்கு  வந்ததால் அவரை காப்பாற்ற முடிந்தது  என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.