MEDIA STATEMENT

தீயில் இரு மூத்த குடிமக்கள் கருகி மாண்டனர்

3 மார்ச் 2024, 10:30 AM
தீயில் இரு மூத்த குடிமக்கள் கருகி மாண்டனர்

கோலாலம்பூர், மார்ச் 3 - ஜாலான் கிள்ளான் லாமாவின் ஸ்கோட் கார்டனுக்கு முன் இருந்த குடியிருப்பில்  இன்று அதிகாலையில் 16 குடிசை வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அதிகாலை 4.57 மணிக்கு தீ விபத்து குறித்து திணைக்களத்திற்கு அவசர அழைப்பு வந்தது.

சீ பூத்தே, ஜாலான் அங் துவா, செந்தூல், ஸ்ரீ பெட்டாலிங், பந்தாய்,  ஸ்ரீஅர்தமாஸ், தாமான் துன்,  கிராமாட் ஆகிய நிலையங்களில் இருந்து 46 பணியாளர்களுடன் ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு திரட்டப்பட்டன.

வீடுகள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக இருப்பதால் தீயை அணைக்கும் பணிக்கு இடையூறாக இருந்தது, மேலும் காலை 6.05 மணி அளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது, 12 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன,  மேலும் 4 வீடுகள் 50 சதவீதம் நாசமடைந்தன”   என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் ஆராயப்பட்டு வருகிறது, அவர் மேலும் கூறினார்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.