MEDIA STATEMENT

கெர்லிங், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் தைப்பூச விழா-  சத்திய பிரகாஷ் சிறப்பு வருகை

26 ஜனவரி 2024, 10:24 AM
கெர்லிங், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் தைப்பூச விழா-  சத்திய பிரகாஷ் சிறப்பு வருகை

கெர்லிங், ஜன 26- சிலாங்கூர் மாநிலத்தின் வட பகுதியில் குறிப்பாக உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள  இந்துக்களின் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலமாக விளங்குவது கெர்லிங், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயமாகும்.

பத்து மலை மற்றும் கோல சிலாங்கூர்  முருகப் பெருமான் திருத்தலங்களுக்கு அடுத்து இங்குதான் தைப்பூச விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆலயத்தில் வழக்கம் போல் இவ்வாண்டு தைப்பூசத்தின்போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

இந்த திருவிழாவில் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி  ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ்  நடராஜன்  ஏற்பாட்டில் ஆலய வளாகத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களின் தாகம் தணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தைப்பூச விழாவுக்கு வருகை புரிந்த டாக்டர் பிரகாஷூடன் அளவளாவிய பொதுமக்கள்  தங்கள் மகிழ்ச்சியை அவருடன் பகிர்ந்து  கொண்டனர்.

முன்னதாக அவர், ராசா ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூச விழாவிலும் கலந்து கொண்டார்.  அவருக்கு ஆலய நிர்வாகத்தினர் மாலை அணவித்து சிறப்பு செய்தனர்.

ஆலய நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு கணிசமானத் தொகையையும் அவர் ஆலயத்திற்கு வழங்கினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.