MEDIA STATEMENT

சரவா மாநில ஆளுநராக வான் ஜூனைடி நியமனம்

26 ஜனவரி 2024, 4:59 AM
சரவா மாநில ஆளுநராக வான் ஜூனைடி நியமனம்

கோலாலம்பூர், ஜன.26 - முன்னாள் மேலவைத் தலைவர் துன் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் சரவாக்கின் 8வது யாங் டி பெர்த்துவா நெகிரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் இன்று  முதல் அமலுக்கு வருகிறது.

இங்குள்ள இஸ்தானா நெகாராவில் உள்ள பலாய் ரோங் கெச்சிலில் நடந்த நிகழ்வில் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷாவிடமிருந்து நியமனக் கடிதத்தை வான் ஜூனைடி பெற்றார். அவருக்கு 'துன்' விருதும் வழங்கப்பட்டது.

விழாவில் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியாவும் கலந்து கொண்டார்.

77 வயதான வான் ஜுனைடி, சரவாக் அரசியலமைப்பின்  1 ஆம் பிரிவுக்கேற்ப சரவாக்கின் ஆளுநராக நான்கு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் ஜனவரி 26, 2024 முதல் ஜனவரி 26, 2028 வரை அமலில் இருக்கும்.

கடந்த மார்ச் 1, 2014 முதல் மூன்று தவணைகள் பதவி வகித்த துன் அப்துல் தாயிப் மாமுட்டிற்கு  பதிலாக  வான் ஜூனைடி இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.